News January 7, 2026
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 10, 2026
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
1.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
2.பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
3.அவசர ஊர்தி (Ambulance)-102, 108
4.தீயணைப்பு-101
5.காவல் கட்டுப்பாட்டு அறை-100
6.குழந்தைகள் பாதுகாப்பு-1098
7.பெண்கள் உதவி-1091
8.சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News January 10, 2026
புதுவை: ரவுடிகள் உட்பட 8 பேர் கைது

திருக்கனூர் அடுத்த வாதானூர் மின்துறை அலுவலகம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தலைமை காவலர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 10, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT


