News May 4, 2024

போட்டி போட்டு விக்கெட் வீழ்த்திய MI – KKR பவுலர்கள்

image

இதுவரை நடந்த IPL போட்டிகளில் பேட்டிங் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். முதலில் பேட்டிங் செய்த KKR அணி, MI பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், வெங்கடேஷ் ஐயரின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 169 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய MI, சூர்யகுமார் (46), டிம் டேவிட் (24) தவிர, மீதமுள்ள 8 விக்கெட்டுகளும் 75 ரன்களுக்கு வீழ்ந்தது.

Similar News

News February 2, 2026

‘நாங்கள் சாகப் போகிறோம்’

image

தலைப்பை பார்த்ததும் பதற்றம் ஏற்படுகிறதா? கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், இப்படித்தான் தனது உறவினர்களிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றபோது, கமலேஷ், அவரது மனைவி இலக்கியா, மகள் ஏஞ்சல்(10) ஆகியோர் விஷம் அருந்தி உயிரற்ற உடல்களாக கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News February 2, 2026

அதிரடி திருப்பம்: கூட்டணி அமைத்த பாஜக- காங்கிரஸ்!

image

பரம எதிரிகளான காங்கிரஸ் & பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் மாநகராட்சியின் மேயர் & துணை மேயர் தேர்தலில், இஸ்லாம் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. 84 உறுப்பினர்களை கொண்ட மாலேகான் முனிசிபல் கார்ப்பரேஷனில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி மேலிட உத்தரவின்றி கூட்டணி அமைப்பது குறித்து CM தேவேந்திர பட்னவிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

SPORTS 360°: WC-ல் ஆஸி.,க்கு பெரும் பின்னடைவு

image

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 கைப்பற்றியது. *காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையின் தொடக்க போட்டிகளில் ஹேசல்வுட் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. *CCL கிரிக்கெட் தொடரில் கர்நாடகா புல்டவுசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. * நிச்சயம் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வேன் என ஜோகோவிச் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!