News May 4, 2024
இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. ஏற்கெனவே கோடை வெயில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இன்று தொடங்கும் கத்தரி வெயில் மே 29-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால், வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் என்பது விஞ்ஞானக் கணக்கல்ல. அது பஞ்சாங்கக் கணக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
போர் வெடிக்கும்.. டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை அனுப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய போராக மாறும் என சுப்ரீம் லீடர் கொமேனி எச்சரித்துள்ளார். தாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளார். மேலும், ஈரானின் எண்ணெய் & இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற அமெரிக்கா முயல்வதாகவும் சாடியுள்ளார்.
News February 2, 2026
தேர்தல் ரிசல்ட் பாஜகவுக்கு தெரியும்: ஜோதிமணி MP

மத்திய பட்ஜெட் முற்றிலும் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஜோதிமணி MP கூறியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து தான் தமிழகத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் TN எதிர்பார்த்த மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


