News January 7, 2026
சேலம்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
Similar News
News January 25, 2026
ரயில்களில் தீவிர பாதுகாப்பு சோதனை!

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாபு மற்றும் பாதுகாப்பு ஆணையாளர் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார், ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர்.மேலும் பயணிகள் உடைமைகள், நடைமேடைகள்,பார்சல் அலுவலகம் மற்றும் ஓய்வறைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடப்பட்டது.
News January 25, 2026
திறக்கப்பட்ட 10 நாட்களில் சேதமடைந்த குமரகிரி ஏரி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹22 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி 14-ல் திறக்கப்பட்ட குமரகிரி ஏரி பத்தே நாட்களில் சேதமடைந்துள்ளது. நடைபாதை படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் திறக்கப்பட்ட இந்த ஏரியின் கரைகளில் பதிக்கப்பட்ட கற்கள், தரக்குறைவான கட்டுமானப் பணியால் தற்போது பெயர்ந்து காணப்படுகின்றன.சில நாட்களிலேயே ஏரி சேதமடைந்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News January 25, 2026
சேலம்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


