News January 7, 2026
அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஏஞ்சலினா ஜோலி

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. F1 பட நடிகரும், தனது கணவருமான பிராட் பிட்டை கடந்த 2024-ல் விவாகரத்து செய்த நிலையில், இந்தாண்டின் இறுதியில் வெளியேற திட்டமிட்டுள்ளார். அவர் தனது 2-வது வீடு என கூறி வரும் கம்போடியா செல்லவே அதிக வாய்ப்புள்ளது. இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் 2017-ல் ₹220.5 கோடிக்கு வாங்கிய தனது பங்களாவை விற்க தயாராகி வருகிறார்.
Similar News
News February 19, 2026
புதிய மாவட்டங்கள் பிரிப்பதை மறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஸ்டாலின் தலைமையிலான நடப்பு ஆட்சியில் தற்போது வரை புதிய மாவட்டம் உருவாக்குவதை அவர் மறந்துவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த கும்பகோணம் தனி மாவட்டமாக உதயமாகும் என்ற வாக்குறுதி நிறைவேறாதது அங்கு திமுகவினரையே அப்செட் ஆக்கியுள்ளதாம். முன்னதாக MGR(5), கருணாநிதி(9), ஜெயலலிதா(7), EPS(6) என CM ஆக தங்களது ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்கியிருந்தனர்.
News February 19, 2026
நடப்பு டி20 WC தொடரில் இமாலய சாதனை!

ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள் முதல்முறையாக அடிக்கப்பட்டு சாதனையாக பதிவாகியுள்ளது. நடப்பு டி20 WC-ல் இலங்கையின் பதும் நிசாங்கா(100), கனடாவின் யுவராஜ் சம்ரா (110), பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான்(100) ஆகியோர் சதம் கண்டுள்ளனர். இதற்கு முன்பு எந்த டி20 WC தொடரிலும் 2 சதத்துக்கு மேல் பதிவானதில்லை. இந்நிலையில் நடப்பு தொடரில் இன்னும் 19 ஆட்டங்கள் மீதமுள்ளதால், மேலும் கூடுதல் சதங்களை எதிர்பார்க்கலாம்.
News February 19, 2026
L வடிவ மேம்பாலமா? W பள்ள மேம்பாலமா? அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட<<19147672>> L வடிவ மேம்பாலம் <<>>மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதில் பயணிக்கும் போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வு தான் ஏற்பட்டதாகவும், ₹61 கோடி மதிப்பீட்டில் மக்கள் பணத்தைக் கொட்டி அப்பாலத்தை கட்டியதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


