News January 7, 2026
மக்கள் செல்ல தடை – திருச்சி கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
திருச்சி: மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை

மணப்பாறை அடுத்த செவலூரைச் சேர்ந்த நவப்பிரியா என்பவருக்கும், அவரது மாமியார் செல்வராணிக்கும் நேற்று பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவப்பிரியா தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மற்றும் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
திருச்சி: விபத்தில் கல்லூரி மாணவி பலி

திருச்சியில் இருந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது, கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சாலினி (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மாணவர் திருச்சி GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.


