News January 7, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவர்கள் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்காக வந்த அமியாபிஷோயி(34) என்ற வடமாநில இளைஞர், அப்பணியில் இருந்த போது, இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 12, 2026

திருவள்ளூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

திருவள்ளூர் வாலிபர் போக்சோவில் கைது!

image

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 16 வயது +2 மாணவி, நேற்று(ஜன.11) காலை டியூசனுக்கு சென்ற போது, கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன்(19) என்பவர் பின் தொடர்ந்து, மாணவியின் செல்போனைக் கேட்டு தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், அவரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!