News January 7, 2026
தவெகவில் அடுத்தடுத்து இணைந்தனர்

KAS வரவுக்கு பிறகு தவெக புதுபலம் பெற்றிருக்கிறது. அவர் நகர்த்தும் காய்களால்தான் திமுக, அதிமுக, பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவுக்கு வருகின்றனர். சேலம் Ex MLA பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், புதுச்சேரி Ex பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, வைத்திலிங்கம் (OPS), பெரியசாமி (அதிமுக) போன்ற பலரும் இணைவார்கள் என பேசப்படுகிறது.
Similar News
News February 11, 2026
நாளை ஸ்டிரைக்: தமிழக அரசு புதிய வார்னிங்!

தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியதை கண்டித்து நாளை(பிப்.12) பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்கு திமுகவின் தொமுச உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாளை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News February 11, 2026
காதலுக்காக ₹2,500 கோடியை உதறிய பெண்!

Practical ஆக மாறிவிட்ட இன்றைய ஜெனரேஷனை ஏஞ்சலின் பிரான்சிஸின் கதை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மலேசியாவில் கிட்டத்தட்ட ₹2,500 கோடிக்கு இளவரசியாக பிறந்தவர், எளிய பின்புலத்தை சேர்ந்த ஜெடியாவை காதலித்துள்ளார். சொத்தா? காதலா? என்ற கேள்வியை தந்தை ஏஞ்சலின் முன் வைக்க, காதலரை ஏஞ்சலின் கரம் பிடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஜெடியாவை திருமணம் செய்த ஏஞ்சலின், இன்றும் காதலில் திளைத்து வாழ்ந்து வருகிறார்.
News February 11, 2026
பள்ளி மாணவர்கள் 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, உ.பி.,யில் பள்ளி மாணவர்களுக்கு Albendazole மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் 120 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்களுக்கு இம்மாத்திரை அளிக்கப்படும் சூழலில், மாத்திரையால் பிரச்னை இல்லை எனவும் வேறு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.


