News May 4, 2024
ரசிகர்களின் மனம் கவர்ந்த பூஜா ஹெக்டே

முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர், தொடர் தோல்விப் படங்களால் தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவரை, ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், நடிகையின் கார் டிரைவர் சுனில் உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1- A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
விஜய்யின் புதிய முயற்சி இதுவா?

தவெக கூட்டத்துக்காக புதுச்சேரி உப்பளத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 3 கூடுதல் நுழைவாயில்கள், தண்ணீர், நாற்காலிகள், லைட் என அனைத்தும் போடப்படும் நிலையில், ஸ்டேஜ் மட்டும் அமைக்கப்படாது என தகவல் கசிந்துள்ளது. ஏன்? கூட்டத்தில் விஜய் பேசமாட்டாரா? என கேட்க வேண்டாம். ஏனென்றால், இம்முறை விஜய் பஸ்சில் இருந்தபடியே கூட்டத்தில் பேச முடிவெடித்திருப்பதாக கூறப்படுகிறது.
News December 8, 2025
ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

சமீபமாக டிரம்ப், <<18356688>>புடினுக்கு ஆதரவாகவும்<<>>, <<18364724>>உக்ரைனை விமர்சித்தும்<<>> வருகிறார். இந்நிலையில், USA-வின் அமைதி திட்டத்தை ஜெலென்ஸ்கி இன்னும் படிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மக்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என்றும், ஆனால் ஜெலென்ஸ்கி இதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.


