News January 7, 2026
செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), நேற்று வண்டலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
செங்கை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 12, 2026
செங்கை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 12, 2026
செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம்

செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செங்கல்பட்டு தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் (2025-26) TRADE APPRENTICES ENGAGEMENT FAIR (TAEF) மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின்கீழ் சென்னை மண்டல அளவிலான தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை நாளை செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையம் வளாகத்தில் நடைபெற உள்ளது.


