News January 7, 2026
விழுப்புரம்: மூதாட்டியை கொடூரமாக தாக்கிய பெண்கள்!

விழுப்புரம்: நாகல்பாக்கத்தைச் சேர்ந்தவர் குப்பு (60). இவர் தனது வீட்டின் அருகே குப்பையை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் முத்துலட்சுமி மற்றும் பரிமளா ஆகிய 2 பேரும் குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
உலக புற்றுநோய் தினம் தினத்தை முன்னிட்டு பேரணி!

இன்று (பிப்.07) விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்
ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில் குமார் உட்பட பலர் உள்ளனர்.
News February 7, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..? DONT MISS

விழுப்புரம் மாவட்ட ஊர்காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில் (14-02-2026) தேதியில் ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது.
இதற்கு வேண்டிய தகுதிகள் :
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்
2. 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
3. ஆண்கள் 165 சென்டிமீட்டர் உயரம், பெண்கள் 155 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 7, 2026
விழுப்புரத்தில் இன்று மின் தடை!

மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(பிப்.7) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரு.வி.ரோடு, கந்தசாமி நகர், குருசாமி மின்னை தெரு, பழைய பேருந்து நிலையம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட 21 பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


