News January 7, 2026
வேலூர்: சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்த நபர்!

குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சையத் நியாஸ் (31). இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு குடியாத்தம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், சையத் நியாஸ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
Similar News
News January 26, 2026
வேலூர்: காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News January 26, 2026
வேலூர்: இலவச சேவைக்கு இனி ஒரு message போதும்!

வேலூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 26, 2026
VIT பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.26) 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வேந்தர் விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு விருந்தினர் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


