News January 7, 2026

மயிலாடுதுறை: தலை குப்புற கவிழ்ந்த லாரி

image

சீர்காழியிலிருந்து மாதிரவேளூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இன்று, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி சென்ற லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில், தலை குப்புற கவிழ்ந்தது. இதில், அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து சென்ற கொள்ளிடம் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

image

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.

News January 14, 2026

மயிலாடுதுறை: 1.5 கிலோ தங்கம் திருடிய சிறுவன் கைது

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் 1.5 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா். இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசராணை மேற்கொண்ட போலீசார், தங்க நகைகளை திருடிச் சென்ற சிறுவனை வெறும் மூன்றே மணி நேரத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.

News January 14, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!