News January 7, 2026

நீலகிரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனையொட்டி, ஆண்டுதோறும் கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயிலில் திருவிழா நடத்தபட்டு வருவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் அங்கு சென்று ஹெத்தை அம்மனை வழிபடுவர். இத்திருவிழாவையொட்டி இன்று (ஜன.7) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

கூடலூர் மக்களே உஷார்: அதிரடி உத்தரவு!

image

நீலகிரி மாவட்டம் – T.R. பஜார் முதல் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் வரை, சாலை இரு புறமும் உள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் , கடைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக அகற்ற உத்தரவு ஆணையை தேசிய நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்துள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்மட்ட திட்டுக்கள் உணவு வாகனங்கள் தள்ளுவண்டிகள் ஆகியவற்றை அகற்ற, உதகை கோட்ட பொறியாளர் மூலம் நேரடியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட உள்ளது.

News January 21, 2026

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் அருகில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 23ஆம் (வெள்ளிக்கிழமை ) தேதி காலை 11:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் முகாமில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம்.

News January 21, 2026

குன்னூர் நகராட்சி ஆணையர் அதிரடி கைது!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில், கட்டிட பணிக்கு அனுமதி வழங்க, நகராட்சி ஆணையர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி மற்றும் உதவியாக இருந்த நகராட்சி இளநிலை உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!