News January 7, 2026

சேலம்: செல்போன் மோகத்தால் நிகழ்ந்த துயரம்!

image

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்( 40). இவரது 17 வயது மகன், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 30, 2026

சேலம்: What’s App மூலம் ஆதார் அட்டை

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

சேலத்தை அலற வைத்த சம்பவம்

image

சேலம் சூரமங்கலத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் வெள்ளிக்கடை நடத்தி வரும் சுமதி என்பவர் கடையில் தனியாக இருந்தபோது, ஹெல்மெட் அணிந்த நபர் பொருள் வாங்குவது போல் நடித்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்றார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம நபர் தப்பியோடினார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

BREAKING: ஆத்தூரில் தாய், மகள் தற்கொலை

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். லட்சுமிக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 5 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3-வது மகள் தீபவேணிக்கு திருமணம் ஆகாதது மற்றும் கடன் தொல்லை அதிகரித்தது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

error: Content is protected !!