News January 7, 2026
ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்: அழகிரி

ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதால், அதிகாரத்தில் பங்கு கேட்பது நியாயமானது என காங்கிரஸின் KS அழகிரி தெரிவித்துள்ளார். வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிக தொகுதி கேட்கின்றனர் என தெரிவித்த அவர், தங்களை பொறுத்தவரை திமுக தோழமை கட்சி என்பதால் பேரம் பேச தேவையில்லை என கூறியுள்ளார். அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
நிதியை திமுக சரியாக பயன்படுத்தல: கிருஷ்ணசாமி

லோக்சபாவில் திமுக கூட்டணியின் 40 MP-க்கள் என்ன செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடமையை செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை என்ற அவர், நிதியை TN அரசு சரியாக பயன்படுத்துவதில்லை என்றார். மேலும், கிடைக்கும் நிதியை வைத்து திட்டங்களை TN அரசு சிறப்பாக செயல்படுத்திய பிறகு, ‘நிதி போதவில்லை’ என்று கேட்டால் அதற்கு நாங்களும் குரல் கொடுக்கத் தயார் என கூறியுள்ளார்.
News February 2, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

தேமுதிகவை மதித்து எந்த கூட்டணியில் அதிக இடம் வழங்குகிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாளை(பிப்.3) கூட்டணி முடிவை தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.
News February 2, 2026
தினமும் ஒன்று.. உடலுக்கு நன்று!

➤துளசி ஜூஸ் – ஆஸ்துமா, இருமல், சைனஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். ➤தர்பூசணி ஜூஸ்: நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ➤கேரட் ஜூஸ்: உடலில் உள்ள கட்டிகளை எதிர்த்து போராடும். பசியை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க உதவும். ரத்த சுத்திகரிப்புக்கு உதவியாக இருக்கும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, SHARE THIS.


