News January 7, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்த நிலையில், இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் ஹெத்தை திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
திமுகவிடம் டிமாண்ட் செய்யும் மமக

2021-ல் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதி ஒதுக்கிய திமுக, அதனை வரும் தேர்தலில் <<19072975>>4 முஸ்லிம் கட்சிகளுக்கு<<>> ( முஸ்லிம் லீக், மமக, SDPI, தமிமுன் அன்சாரி) பகிர்ந்தளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். இது இஸ்லாமிய கட்சிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ள ஜவாஹிருல்லா, தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 11, தை 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News February 11, 2026
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: கனிமொழி

‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என காங்., MP மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு சிலர் பேசுகின்றனர்; அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக-காங்., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என்றார்.


