News January 7, 2026

‘பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாற்றம்’

image

Modern Day கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என டெஸ்ட் ஜாம்பவான் நீல் ஹார்வே கூறியுள்ளார். மணிக்கட்டை சுழற்றி பந்தை தட்டினாலே பவுண்டரி செல்லும் அளவிற்கு சக்திவாய்ந்த Bats பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பல பலவீனமான அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடுவதாகவும், அவர்களுக்கு எதிராக தானும் விளையாடி இருக்கலாம் என ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?

Similar News

News February 10, 2026

தூங்கி எழுந்ததும் போன் பார்ப்பவரா நீங்க?

image

இந்த பழக்கம் உங்கக்கிட்ட இருந்தா, இச்செய்தி உங்களுக்குதான். காலை எழுந்ததும் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவறவிட்ட செய்திகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக காலையில் படிக்கும்போது அது தேவையற்ற மனப்பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் ஒருவித அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறது.

News February 10, 2026

காங்கிரஸில் சிலர் உயிரை வாங்குகின்றனர்: அமைச்சர்

image

காங்கிரஸில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டணியில் இருப்பதால் செல்வப்பெருந்தகை உடன் போஸ் கொடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரது பேச்சு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்காமல் திமுக காலம் தாழ்த்துவது புகைச்சலாக உள்ளது.

News February 10, 2026

FLASH: ஆட்டோ, கால் டாக்ஸி ஸ்டிரைக் அறிவிப்பு!

image

எரிபொருள், பராமரிப்பு செலவு அதிகரிப்பு இருந்தும், ஆட்டோ கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என புகார் எழுந்தது. பின்னர், இதுதொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்கள், உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காஞ்சி, செங்கை, திருவள்ளூரிலும் சேவைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!