News January 7, 2026
பாஜக IT செல் APP-ஐ பயன்படுத்தும் ECI: மம்தா

SIR பணிகளை எதிர்த்து வரும் மே.வங்க CM மம்தா பானர்ஜி ECI பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக, பாஜக IT செல் உருவாக்கிய மொபைல் APP-ஐ ECI சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான வாக்காளர்களை இறந்தவர்களாகக் காட்டுவது, வயதானவர்கள் நேரில் அழைப்பது என ஜனநாயகத்திற்கு விரோதமாக ECI செயல்படுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.
Similar News
News February 9, 2026
திமுக + பெண்கள் = தவெக.. நிர்மலா போடும் கணக்கு

2026 தேர்தலில் விஜய் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். NDTV-க்கு அளித்த பேட்டியில் பேசிய நிர்மலா, திமுக & பெண்கள் வாக்குகளை விஜய் தன் பக்கம் இழுக்கப் போகிறாரா என்பதும் கேள்வியாகவே உள்ளது என்றும் தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?
News February 9, 2026
BREAKING: நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்.13-ம் தேதி பிற்பகல் 1.11 மணிக்கு குண்டு வெடிக்கும் எனவும், ‘டெல்லி காலிஸ்தானாக மாறும்’ என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், காவல்துறை, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள 10 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
News February 9, 2026
திமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்.. EPS-க்கு ஏமாற்றம்

கடந்த சில தினங்களாக திமுக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த வேல்முருகனை அதிமுக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளுடன் திமுகவை தொடர்ந்து ஆதரிப்பதாக வேல்முருகன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் பேசிய அவர், ஒவ்வொரு வீட்டிலும் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது EPS தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


