News January 7, 2026
தேவ்தத் படிக்கல் படைத்த அரிய சாதனை

விஜய் ஹசாரே கோப்பையில்(VHT) 6 போட்டிகளில் 4 சதம் அடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் தேவ்தத் படிக்கல். அதுமட்டுமல்லாமல் VHT-ல் 600 ரன்களுக்கு மேல் 3 முறை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார். இந்த சாதனையை விராட், சச்சின் போன்ற ஜாம்பவான்களே படைத்தது இல்லை. இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவிக்கும் படிக்கலுக்கு இனியாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 27, 2026
மோடியின் பதிவை சர்ச்சையாக மாற்றிய Grok

மாலத்தீவு குறித்த PM மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிபெயர்த்ததால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு, மோடி அவர்களது மொழியிலேயே X-ல் நன்றி தெரிவித்திருந்தார். அதில் இரு நாடுகளின் நன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக Grok மொழிபெயர்த்துள்ளது.
News January 27, 2026
இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு, முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ₹28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 27, 2026
சென்னை ஏர்போர்ட்டில் தீ விபத்து: விமான சேவை பாதிப்பு

சென்னை ஏர்போர்ட்டின் 2-வது முனையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அங்கு நிலவும், பதற்றம் காரணமாக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் ஏர்போர்ட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


