News January 7, 2026

தென்காசி மாவட்ட கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு!

image

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.

Similar News

News January 25, 2026

தென்காசி: கர்ப்பிணி பெண் தற்கொலை!

image

சிவகிரி அருகே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (23). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று முந்தினம் தனது பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், வாசு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்

News January 25, 2026

தென்காசி மக்களே., காவல்துறை அறிவிப்பு!

image

தென்காசி மாவட்ட மக்களே ஜன. 24 முதல் cctns-2. 0வில் மனு (csr) மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் சில ஆவனங்கள் கொண்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கொண்டு எடுத்து வர வேண்டும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News January 25, 2026

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!