News May 4, 2024
சென்னை: காதலனுக்காக தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

தண்டையார்பேட்டை பகுதியில் கணவரை பிரிந்த நந்தினி என்ற பெண், மணிகண்டன் என்பவரோடு 4 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், நேற்று(மே 3) அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நந்தினி தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் 70% காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
சென்னையில் இன்று ( 23/11/2025) இரவு காவல் ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று ( 23/11/2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 23, 2025
டிச.10தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிச.10ம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
சென்னையில் நாய் கைவிடுதல் அதிகரிப்பு

சென்னையில் கட்டாய நாய் மைக்ரோசிப்பிங் காலக்கெடு நெருங்குவதால், செல்லப்பிராணிகளை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.சி.சி.யின் புதிய செல்லப்பிராணி உரிம விதிகள் மற்றும், ரூ.5,000 அபராதம் குறித்து மக்களிடம் உள்ள குழப்பம் இதற்கு காரணமாக உள்ளது. நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?


