News May 4, 2024

CSK அணியில் இருந்து தீபக் சஹார் விலகல்?

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவர் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது CSKவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Similar News

News December 9, 2025

இன்று வரலாறு படைப்பாரா பும்ரா?

image

SA-க்கு எதிரான <<18509403>>டி20 தொடர்<<>> இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தற்போது வரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் போதும், வரலாறு படைப்பார். அதாவது, 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைப்பார். T20 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் மாறுவார்.

News December 9, 2025

விஜய்க்காக ‘மொட்டை’ அடித்த பெண்

image

கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த தவெக பெண் தொண்டர் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், இந்த முடி காணிக்கையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அப்பெண் அறிவித்துள்ளார்.

News December 9, 2025

புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.

error: Content is protected !!