News May 4, 2024
ரயில் மூலம் கோவை வந்த கராத்தே வீரர்கள்

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கோஜு ரியூ தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 95 பேர் கலந்து கொண்டு வெற்றிபெற்றனர். அவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில்வே நிலையம் இன்று வந்தடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.
Similar News
News December 7, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடையா்பாளையம் டிவிஎஸ் நகரை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ரியா(5). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில் காய்ச்சலால் சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் நேற்று முந்தினம் குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் பெற்றோர் சென்று பார்த்த போது, தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 7, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.08) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எம்ஜி சாலை, ஒண்டிப்புதூர், துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம், வலசுபாளையம் அய்யப்பநாயக்கன்பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 7, 2025
கோவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8.மின்சாரத்துறை – 1912
9.சாலை விபத்து அவசர சேவை – 1073
10.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
இதனை ஷேர் பண்ணுங்க


