News January 7, 2026

யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்: EPS

image

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என EPS கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அதிமுகவுக்கு சிலர் அவப்பெயரை ஏற்படுத்த முயல்வதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரியநேரத்தில் தரப்படும் என்றும், நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 5, 2026

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

image

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.

News February 5, 2026

234 தொகுதிகளிலும்.. தேமுதிக முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். பிப்.6 முதல் பிப்.12 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும் என கூறிய அவர், சென்னை ஆபீஸில் 12-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ₹15,000, தனித்தொகுதிக்கு ₹10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News February 5, 2026

ஹனிமூன் கொலை 2.0: ராஜஸ்தானில் கொடூரம்!

image

ராஜஸ்தானில் புதுமண தம்பதி வாக்கிங் சென்றபோது, வாகன விபத்தில் கணவர் ஆஷிஷ் உயிரிழக்க, மனைவி அஞ்சுவின் நகைகளை சிலர் திருடி சென்றுள்ளனர். இது விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் ஆஷிஷ் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில், அஞ்சு காதலனுடன் சேர்ந்து ஆஷிஷை கொலை செய்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேகாலயா ஹனிமூன் கொலை போல, இது ராஜஸ்தான் ஹனிமூன் கொலை என குறிப்பிடப்படுகிறது.

error: Content is protected !!