News January 6, 2026

‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா?

image

‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி ஜன.9-ல் ரிலீஸாகுமா என கேள்வி எழுந்துள்ளது. பட ரிலீஸுக்கு 3 நாள்களே உள்ள நிலையில், தற்போதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பட ரிலீஸை ஜன.10-ம் தேதிக்கு ஏன் தள்ளி வைக்கக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

Similar News

News January 26, 2026

நாங்குநேரியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை

image

கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக – பாஜக தரப்பு தொடங்கியிருக்கிறது. குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சதீஷுடன் நயினார் நாகேந்திரனும், அதிமுக தலைவர்களும் 10 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 26, 2026

கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இரவில் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலையும் மழை தொடர்ந்தால், விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!