News May 4, 2024

நாளை OTT-இல் வெளியாகிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.23ஆம் தேதி வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், நாளை ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில், அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

Similar News

News February 11, 2026

செங்கோட்டையனின் பரிதாப நிலை: திண்டுக்கல் சீனிவாசன்

image

சமீபத்தில் EPS-ஐ சீண்டிய செங்கோட்டையனை திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதன்மையானவராக இருந்த செங்கோட்டையனின் தற்போதைய நிலையை பார்த்தால் பரிதாபமாகவும் கஷ்டமாகவும் இருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதலிடத்தில் இருந்த மாபெரும் மனிதரை (KAS) தவெகவில் 5-ம் இடத்தில் உட்கார வைத்துள்ளனர்; இதையெல்லாம் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது என்றார்.

News February 11, 2026

சீட் இல்லையென்றால் கவலை வேண்டாம்: விஜய்

image

மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவெகவில் இணைந்ததால் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு கூட சீட் கிடைக்காத சூழல் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் ‘வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வருத்தப்படக்கூடாது’ என விஜய் கூறியுள்ளார். வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவும், ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News February 11, 2026

விவாகரத்தால் சந்தோஷம் அடைகிறேன்: பார்த்திபன்

image

நடிகை சீதாவுடனான விவகாரத்து குறித்து நடிகர் பார்த்திபன் மனம் திறந்து பேசியுள்ளார். சீதாவுடன் வாழ்ந்த 12 ஆண்டுகள் மிகவும் இனிமையானவை எனக்கூறிய பார்த்திபன், சீதாவை பிரிந்ததை எண்ணி வருந்தியதே இல்லை; சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்றும் சுதந்திரமாக வாழவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!