News January 6, 2026
தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவருக்கு ஆட்சியர் வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று (06.01.2026) வருகை புரிந்த தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர் வெ. ஆறுச்சாமியை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த ஆய்வின் போது தூய்மைப் பணியாளர்களின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 12, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

கந்திலி போலீசார் நேற்று முன் தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரியம்பட்டி அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வனிதா(40) என்பதும், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர். மேலும், கடலரசன்(30) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
News January 12, 2026
ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

கந்திலி அருகே உள்ள பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்து வந்ததி. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 12, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


