News January 6, 2026

பழம்பெரும் நடிகர் சுரேஷ் குமார் காலமானார்

image

பழம்பெரும் நடிகர் சுரேஷ் குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கு சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள அவர், கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இந்தியிலும் அமிதாப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் படம் மட்டுமின்றி பல ஆர்ட் படங்களிலும் கலக்கிய அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

விடாப்பிடியாக இருக்கும் காங்., கறார் காட்டும் திமுக

image

தொகுதிப் பங்கீடு குறித்து பேச 36 நாட்களாக காங்., குழு காத்திருக்கும் நிலையில், திமுகவோ இன்னும் குழுவை அமைக்கவில்லை. இதற்கு காரணம் காங்., 41 தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதுதான் என கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தால் கூட்டணியில் பிரச்னை வந்துவிடும். சீட் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தொகுதிப்பங்கீடு குறித்து பேச முடியும் என்பதில் திமுகவும் விடாப்பிடியாக இருக்கிறதாம்.

News February 9, 2026

காழ்ப்புணர்ச்சியால் அதிமுக மீது திமுக விமர்சனம்

image

‘எப்போதும் அதிமுக தனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தே இல்லை என்று உதயநிதிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை எனக்கூறிய அவர், மக்களின் செல்வாக்கு அதிமுகவிற்கே உள்ளது என்பதை வரும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்; அதிமுக எவருக்கும் கிளையாக மாறாது, அது தனித்துவமான இரட்டை இலை எனத் தெரிவித்தார்.

News February 9, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 9, தை 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 PM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!