News May 4, 2024
தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்றுகூட உள்ளதால், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
BREAKING: தமிழகத்தில் 3 இடங்களில் CBI ரெய்டு

சென்னையில் மீனம்பாக்கம், பூக்கடை மற்றும் செங்கல்பட்டில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபார முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
News August 30, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்காக..

வார விடுமுறை நாள்கள் என்பதால், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது ஏழுமலையானின் தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருப்பதாக TTD அறிவித்துள்ளது. தரிசனத்திற்கான 9 அறைகளும் நிரம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று, 65,717 பேர் ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஒரே நாளில் சுமார் ₹3.39 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 30, 2025
BREAKING: தங்கம் விலையில் வரலாறு காணாத மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.30) சவரனுக்கு ₹680 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,620-க்கும், சவரன் ₹76,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ₹77,000 நெருங்கியதால் நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.