News January 6, 2026

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. லிஸ்ட் போட்ட ஆதவ் அர்ஜுனா

image

TN-ல் இனி எந்த கட்சியும் தனித்து ஆட்சியில் அமர முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற சுயமரியாதை முழக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 2024 LS தேர்தல் வெற்றியின் அடிப்படையில் திமுக கூட்டணியில் காங்-க்கு-54, VCK, CPM, CPI-க்கு தலா 12, MDMK, IUML-க்கு தலா 6 தொகுதிகளை தற்போது வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 15, 2026

தமிழ் Biggboss-ன் அடுத்த Host இவரா?

image

டைரக்‌ஷனுக்கு கொஞ்சம் பிரேக் விட்டுவிட்டு தற்போது நடிப்பு, TV ஷோக்களின் நடுவர் என படு பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இந்நிலையில், பலரும் விரும்பி பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த ஷோவின் அடுத்த தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு கிடைக்கலாம் என பேசப்படுகிறது. பிக்பாஸை மிஷ்கின் Host செய்தால் எப்படி இருக்கும்?

News January 15, 2026

மே.வங்கத்தில் வன்முறை கும்பல் ஆட்சி: ED

image

மே.வங்கத்தில் <<18797106>>I-PAC<<>> அலுவலக சோதனையை CM மம்தா பானர்ஜி தடுத்ததாக SC-ல் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், ரெய்டின் போது மம்தாவும், போலீசாரும் அத்துமீறி நுழைந்து ஆதாரங்களை திருடி சென்றதாக ED குற்றஞ்சாட்டியதுடன், மே.வங்கத்தில் நடப்பது வன்முறை கும்பலின் ஆட்சி என்றும் விமர்சித்தது. இதற்கு பதிலளித்த மம்தா தரப்பு, தேர்தல் நேரத்தில் கட்சியின் ரகசிய தரவுகளை திருடவே ED திட்டமிட்டதாக வாதிட்டது.

News January 15, 2026

தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

image

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!