News January 6, 2026
ஜனநாயகனில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகளா?

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கின் விசாரணையை மெட்ராஸ் HC நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே சான்றிதழ் கோரி சென்சாருக்கு அனுப்பிய நிலையில், இன்னும் சான்று கிடைக்காததால் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த HC, படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக வந்த புகாரை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.
Similar News
News January 13, 2026
பொங்கல் நாளில் ஜன நாயகன் வழக்கு விசாரணை

சென்சார் விவகாரத்தால் ‘ஜன நாயகன்’ ரிலீஸில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, சென்னை HC ஆணைக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு பொங்கல் பண்டிகை நாளான ஜன.15-ல் விசாரணைக்கு வருகிறது. அத்துடன், பொங்கலுக்கு பிறகு கரூர் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்க்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News January 13, 2026
பெற்றோரை கைவிட்டால் சம்பளத்தில் 15% பிடித்தம்!

தங்களது பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% வரை பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை உடனே கொண்டுவர உள்ளதாக தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இக்காலத்தில் வயதான பெற்றோரை கைவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அப்படி பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்ற ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
News January 13, 2026
இந்த கண்டிஷன்கள் இருக்கா.. பொண்ணே கிடைக்காது!

Superblog.ai என்ற நிறுவனத்தின் CEO சாய் கிருஷ்ணா ஒரு Matchmaking தளம் மூலம் பெண் தேட, அந்த நிறுவனத்தின் CEO-வை அணுகியுள்ளார். பெண்ணுக்கு மது & புகை பழக்கம் இருக்க கூடாது, Vegeterian-ஆக இருக்கணும் என்ற 3 கண்டிஷன்களையும் அவர் சொல்ல, இப்படிபட்ட பெண்ணே கிடைக்க மாட்டார் என Matchmaking தரப்பினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் பதிவிட, நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?


