News January 6, 2026
தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட குறைகள் மற்றும் ஆலோசனைகளை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 17, 2026
தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்கள் ஜன.14-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆய்வாளர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
News January 17, 2026
தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கூட்டத்தில் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


