News May 4, 2024
ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26 லட்சத்து 25,157 வங்கியிலும், ரூ.49 லட்சத்து 79,184 கடன் இருப்பதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.
Similar News
News August 30, 2025
மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு

GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார், அதே வேளையில் இந்த நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநில நிதி பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News August 30, 2025
லோகேஷ் கனகராஜுடன் ஜோடி சேரும் ரஜினியின் மருமகள்

அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக களம் காணவுள்ளார். படத்திற்கான கதை தயாராகிவிட்டதால், விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக மிர்னா மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிர்னா மேனன், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 30, 2025
ரூபாய் மதிப்பு முதல் முறையாக ₹88ஆக வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன் தினம் ₹11 காசுகள் உயர்ந்து, ₹87.58 ஆக முடிவடைந்தது. ஆனால், நேற்று இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு வெளியேறியது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு ஒரேடியாக ₹61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹88 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.