News May 4, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶உத்திர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி
▶மே, ஜூனில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்
▶இந்தாண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்
▶நாம் தமிழர் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
▶மின் பயன்பாட்டில் புதிய உச்சத்தை எட்டியது தமிழ்நாடு
▶விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது
Similar News
News December 9, 2025
விஜய் நின்ற அதே இடத்தில் சிவகார்த்திகேயன்

‘SK 26’ படத்திற்காக வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் இருவரும் சில நாள்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், VFX பணியில் சிவா இருப்பது போன்ற போட்டோவை VP, தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்துள்ளார். அத்துடன், கிளீன் சேவில் இருக்கும் சிவாவின் போட்டோவும் வைரலாகிறது. முன்னதாக, இதே போன்று தான் முதலில் ‘கோட்’ படத்தின் அப்டேட்டும், VFX பணிகளில் விஜய் இருப்பதுபோல் வெளியாகியிருந்தது.
News December 9, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $2.78 குறைந்து $4,195.03-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.29 டாலர் உயர்ந்து $58.11 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,320-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.


