News January 6, 2026
தேனி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

தேனி மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
தேனி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <
News January 17, 2026
ஜன.20-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜன.20 (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேனி, போடி மற்றும் ராசிங்காபுரம் மின் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News January 17, 2026
தேனி: போலி நகை அடகு வைத்து பல லட்சம் மோசடி..

பெரியகுளத்தில் உள்ள TMB-யில் திண்டுக்கலை சேர்ந்த சரவணக்குமார், இவரது நண்பர் ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்ததும் நகைகளை திருப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விவேக் சோதனை செய்ததில் நகைகள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.


