News January 6, 2026

தீபத்தூண் வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

image

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை <<18776534>>இரு நீதிபதிகள் அமர்வு<<>> உறுதி செய்துள்ளது. அத்துடன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ ◆தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் உள்ளது ◆மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் கோயில் நிர்வாகத்தினர் தீபம் ஏற்ற வேண்டும் ◆மலை மீது தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது ◆தர்காவிற்கு இடையூறு இல்லாமல் தூணை இடம் மாற்றலாம்.

Similar News

News February 9, 2026

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

image

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ராகுல் காந்தியின் இல்லத்தில் இண்டியா கூட்டணி MP-க்கள் கூட்டம் நடைபெற்றது. அவையில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது, PM மோடியை பெண் எம்பிக்கள் தாக்க முயன்றதாக குற்றம்சாட்டியது, 8 MP-க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், திமுக MP TR பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 9, 2026

OPS நாடகத்தால் மக்கள் சலித்து விட்டனர்: செல்லூர் ராஜு

image

அதிமுகவில் இணைய ஊடகம் மூலம் கோரிக்கை வைக்கும் நாடகம் வேண்டாம் என OPS-க்கு செல்லூர் ராஜு அறிவுறுத்தியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், முதல்வராக இருந்தவருக்கு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும் தானே என்று கேள்வியெழுப்பினார். மேலும், ஊடகத்தில் பேசி பேசிதான் OPS இந்த நிலையில் இருக்கிறார் என்றும், அவரின் நாடகத்தை பார்த்து மக்கள் சலித்துவிட்டனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News February 9, 2026

கணவன், மனைவி தினமும் உறவு வைத்தால்.. Scientist

image

தம்பதிகள் தினமும் பாலியல் உறவு கொள்வதன் மூலம் இருவருக்குமிடையேயான இணக்கம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மன அழுத்த குறைவு என்பது 24 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆய்வு முடிவானது 319 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!