News May 3, 2024
காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்

காஸாவில் 7 மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு கடும் உணவுப் பஞ்சம் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சமீப காலமாக காஸாவிற்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டாலும், அங்கு பஞ்ச நிலை இன்னும் அகலவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 10 – 14 கிலோ வரை இருக்கக் கூடிய 2 வயது குழந்தைகள், வெறும் 4 கிலோ எடையில் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News February 9, 2026
உலக சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $63 உயர்ந்து $5,030-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $4.29 உயர்ந்து $82-க்கு விற்பனையாகிறது. இந்திய சந்தையில் காலையில் <<19089496>>சவரனுக்கு ₹1,840 உயர்ந்த<<>> நிலையில், மாலை நேர வர்த்தகத்திலும் சற்று உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News February 9, 2026
திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காதது ஏன்?

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், இப்போதே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால், மொத்த ஊடக கவனமும் அதை சுற்றியே திரும்பிவிடும். எனவே தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து, அதனை மக்களிடம் சேர்ப்பதில் ஸ்டாலின் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
News February 9, 2026
77382 99899 உடனே இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க

‘77382 99899’ என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து, உங்களின் EPFO பேலன்ஸை அறிந்து கொள்ளலாம் தெரியுமா? EPFO-ல் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் இருந்து மேற்குறிப்பிட்ட எண்ணிற்கு, EPFOHO -> உங்களின் UAN நம்பர் -> விருப்பமான மொழி (ENG or TAM) என டைப் செய்து மெசேஜ் செய்தால், உங்களின் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது என மெசேஜ் வந்துவிடும். அனைவரும் அறிய வேண்டிய இந்த தகவலை அதிகளவில் SHARE பண்ணுங்க.


