News May 3, 2024
வருமான வரி உயரப் போகிறதா?

வருமான வரித்திட்டத்தில் பல மாற்றங்கள் வர இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது முற்றிலும் தவறான தகவல் என்று மறுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படியான பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்று நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், வருமான வரி உயரப்போவதாக வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Similar News
News February 5, 2026
விஜய்யிடம் நறுக்குன்னு என்ன கேட்கலாம்?

விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிகையாளர்களை பேட்டி எடுத்து திருப்திப் பட்டுக்கொள்ளும் நிலையில் தான், விஜய்யின் மீடியா இன்டராக்சன் உள்ளது. இது சொந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரஸ்ஸை மீட் பண்ணாத அரசியல்வாதி, நாலு விஷயம் தெரிய வேண்டாமா என EPS நேரடியாகவே விஜய்யை அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை விஜய் மீடியாவை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்? கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1-ம் தேதி 31-ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்டி பசங்களா, கொண்டாட்டத்துக்கு ரெடியாகிக்கோங்க!
News February 5, 2026
ஒரே சட்டமன்ற தொகுதியில் அதிகமுறை வென்றவர்கள் யார்?

அரசியலில் கால்பதித்து ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே பெரிய விசயம். ஆனால் ஒரே தொகுதியில் அதிகமுறை வெல்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு தொகுதி மக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெறவேண்டும். அந்த வகையில் தற்போதைய TN அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியில் அதிக முறை வென்றவர்கள் யார் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம். இவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்பதை சொல்லுங்க!


