News January 6, 2026

மயிலாடுதுறை: மீண்டும் ரயில் இயக்க கோரி மனு

image

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கி வேளாங்கண்ணி வரை நீட்டிக்க குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் மீட்புக்குழு செயலா் கே.ராஜேந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் அளித்த மனுவில் தரங்கம்பாடி வரை இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 3, 2026

மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘F<>uel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

மயிலாடுதுறை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <>App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் II, II a பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் பிப்.8-ம் தேதி மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தை சேர்ந்த 86 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 2 மணிக்குள்ளாகவும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும், எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களும் எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!