News January 6, 2026
கோவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே<
Similar News
News February 10, 2026
AI பார்த்து பயப்பட தேவையில்லை: PM

“பரீஷா பே சர்ச்சா” எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது AI குறித்த கேள்விக்கு, AI (அ) போனை நமது எஜமானார்களாக ஆக்கக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். AI-யை கண்டு பயப்பட தேவையில்லை என பிரதமர் மோடி கூறினார்.
News February 10, 2026
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
News February 10, 2026
மதுக்கரை: சாலை விபத்தில் தலை நசுங்கி பெண் பலி

மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோடு இந்திரா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே அசுர வேகத்தில் திவாகர் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் நிலைதடுமாறி கிருஷ்ணவேணி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் கிருஷ்ணவேணியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


