News May 3, 2024

ஈரான், இஸ்ரேல் செல்வோருக்கு மீண்டும் எச்சரிக்கை

image

ஈரான், இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை கருத்தில் கொண்டு, அந்நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களை கவனமாக இருக்கும்படி மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை உற்று கவனித்து வருவதாகவும், 2 நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், அந்நாடுகளுக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News February 5, 2026

தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் தலைகீழாக மாறியது

image

கடந்த வாரத்தில் 1 கிலோவுக்கு ₹1.45 லட்சம் வரை குறைந்து வெள்ளி விலை, பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த 2 நாள்களில் மட்டும் 1 கிலோவுக்கு ₹40,000 உயர்ந்து வெள்ளி விற்பனையாகிறது. தங்கமும் கடந்த சில நாள்களாக ₹22,000 வரை குறைந்தது. இந்நிலையில், தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் தலைகீழாக மாறி, உயர்ந்தவாறே தொடர்வது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

News February 5, 2026

3 நாள் STOP பண்ணுங்க.. அதிசயம் நடக்கும்!

image

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

News February 5, 2026

CM இப்படி செய்வது அவலம்: வானதி

image

TN-காக மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்தும் திமுக அரசு எதிர்ப்பை மட்டுமே காட்டியது என வானதி கூறியுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை திமுக சிதைத்துவிட்டதாக கூறிய அவர், சமூக நீதி என வாய் வலிக்க பேசும் திமுக அரசிடம் மத விஷயத்தில் சமத்துவ போக்கு இல்லை என்றார். மேலும், இந்துக்களின் பண்டிகைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களின் வாக்கு வங்கியை CM வளைக்க துடிப்பது அவலம் என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!