News January 6, 2026
தேர்தலுக்கு பின் CM இதை மறந்துவிடுவார்: RB உதயகுமார்

தேர்தலுக்காக திமுக வழங்கும் திட்டங்கள் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் வரும் போதுதான் CM ஸ்டாலினுக்கு மக்கள் ஞாபகம் வரும் என்ற அவர், தேர்தல் முடிந்த பின்பு மக்களைப் பற்றி சிந்திக்க மறந்து விடுவார் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், TN-ன் தலையெழுத்தை மாற்றும் சக்தியான EPS மீண்டும் CM-மாக வருவார் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.
News January 16, 2026
தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்கள் நினைப்பு: கனிமொழி

பொங்கலை முன்னிட்டு PM மோடியும், அமித்ஷாவும் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்களை பற்றியும், தமிழ் பண்டிகைகளை பற்றியும் மத்திய அரசுக்கு நினைவு வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைப்பவர்களைத் தமிழர்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை எனவும், அவர்களை பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 16, தை 2 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


