News January 6, 2026
புதுச்சேரி: காரைக்கால்-திருவாரூர் ரயில் சேவை ரத்து

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, காரைக்கால்-திருவாரூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
முத்திரையர்பாளையம்: ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிக்கு பூமி பூஜை

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில் சுமார் 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். மேலும், புதிதாக பெரிய வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.1.76 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொகுதி ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News January 29, 2026
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. SHARE பண்ணுங்க!
News January 29, 2026
புதுச்சேரி: ரவுடி அப்பு படுகொலை

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில், அப்பு என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை அடித்து நொறுக்கிய வழக்கில் அப்பு கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், தற்போது மர்ம கும்பலால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


