News January 6, 2026
இன்னும் 5 நாள்களில் களத்தில் Ro-Ko!

வரும் 11-ம் தேதி முதல் நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட ODI தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் விளையாடவுள்ளது. ஆண்டின் தொடக்கமே Ro-Ko களமிறங்கவுள்ளனர் என்பதால், ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இத்தொடருக்கான சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொடரில் ரோஹித், கோலி இருவரில் யார் அதிக ரன்களை அடிப்பார்கள் என நினைக்கிறீங்க?
Similar News
News February 7, 2026
மாவட்ட ஆட்சியரிடம் விசிக சார்பில் மனு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்தை, இன்று மாவட்ட விசிக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வரவேற்பு அளிப்பதாகவும், அதே சமயம் கள்ளக்குறிச்சியில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
News February 7, 2026
இந்தியாவுடன் மோதல்.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி

2025-ல் இந்தியாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலுக்கு பிறகு பாகிஸ்தான் மோசமான பொருளாதார விளைவுகளை சந்தித்து வருகிறது. இந்தியா மலிவு விலை தடுப்பூசி விநியோகத்தை நிறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் தடுப்பூசி இறக்குமதிக்கு ஆண்டுதோறும் $400 மில்லியன் செலவழிப்பதாக அந்நாட்டு அமைச்சர் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதியுடன் சேர்ந்து உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
News February 7, 2026
அதிமுக முட்டுச்சந்தில் தான் நிற்க வேண்டும்: உதயநிதி

பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக கூட்டணி வைத்துள்ளது; ஆனால், திமுக யாருக்கும் பயப்படாது என்று விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் DCM உதயநிதி பேசியுள்ளார். மோடியின் கால்களை பார்த்து EPS & அதிமுக நடந்தால் முட்டுச்சந்தில் தான் நிற்க வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் எந்த அமைப்பும், கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் ஒரு பயனுமில்லை என்று தவெகவை சூசகமாக தாக்கிப் பேசினார்.


