News January 6, 2026

டிகிரி போதும்.. ₹51,000 சம்பளம்

image

SBI வங்கியில் காலியாக உள்ள 327 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★வயது வரம்பு: 26 -35 ★கல்வித்தகுதி: கண்டிப்பாக டிகிரி முடித்திருக்க வேண்டும் ★தேர்ச்சி முறை: Shortlisting, Interview, Merit List ★சம்பளம்: ₹51,666 ★ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் ★வரும் 10-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, வேலை தேடும் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

சற்றுமுன்: போலீஸ் வாகனம் மீதே நாட்டு வெடிகுண்டு வீச்சு

image

பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் வெள்ளை காளியை, சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றபோது, பெரம்பலூர் திருமாந்துறை அருகே 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரவுடி, போலீசார் பலத்த காயமடைந்துள்ளனர்.

News January 24, 2026

பள்ளிக் கட்டணங்களை கட்டுப்படுத்த புதிய கமிட்டி

image

TN-ல் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தும் <<18943567>>திருத்த மசோதா<<>> சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, Retd நீதிபதி தலைமையில் 7 பேர் கமிட்டி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஆராய்ந்து உச்சவரம்பை நிர்ணயிக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்கள் சீராய்வு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்தும் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல். இது அமலுக்கு வரும்தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

News January 24, 2026

விருப்ப மனு ₹50,000… அறிவித்தது மநீம!

image

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில் 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மநீம சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ₹50,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் போட்டியிட விரும்பும் கோவை, தாம்பரம், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல் உள்ளிட்ட 15 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் மநீம கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!