News May 3, 2024
புதுவையில் இன்று 100 டிகிரி வெயில்

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் சார்பில் தெரிவித்துள்ளது.
Similar News
News August 26, 2025
513 ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் ரூ.13 கோடி

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 510 பல்நோக்கு ஊழியர்கள் (எம்டிஎஸ்), 3 பணி ஆய்வாளர்களுக்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அதிக ஊதியம் பெறுவதை மேற்கோள் காட்டி, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையினை வேண்டி கோரிக்கைகள் வைத்ததையடுத்து, ஊதிய உயர்வு நிலுவைத்தொகை ரூ.13 கோடி வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
புதுவை: வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகம், வேலையில்லாத விவசாயப் பட்டதாரிகள் மற்றும் வேளாண் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பெற, உங்கள் பகுதிக்குரிய உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
புதுச்சேரி: டாக்டர் தற்கொலை!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு (24), எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக நுழைவு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ்பாபு நேற்று காலை, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.