News January 6, 2026
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மி. அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது 150 மி. சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 24, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

பொதுக்கூட்டத்திற்கு பிறகு EPS- TTV இருவரும் அருகருகே அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’நானும், தினகரனும் ஜெ., வளர்த்த பிள்ளைகள், எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து, ஜெ., ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்’ என EPS பதிலளித்தார். அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
News January 24, 2026
நாளை மிக கவனம்

நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(ஜன.24) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் குடை, ரெயின்கோட் உள்ளிட்டவற்றுடன் பாதுகாப்பாகச் செல்லுங்கள். SHARE IT
News January 24, 2026
இதெல்லாம் ஸ்பேஸ்ல சாப்பிட தடை! ஏன் தெரியுமா?

விண்வெளியில் சில உணவு வகைகளை நாசா தடை செய்துள்ளது. *பிரட்- புவியீர்ப்பு விசை இல்லாததால் இதன் துகள்கள் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *ஐஸ்க்ரீம்- இதை உறைய வைக்க அதிக மின்சாரம் தேவைப்படும். *மீன்- இதன் துர்நாற்றம் நீங்க நீண்டகாலம் ஆகலாம். *உப்பு, மிளகு- இதன் துகள்களும் காற்றில் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *மது- விண்வெளி வீரர்கள் மது போதையில் தொழில்நுட்ப தவறிழைக்க வாய்ப்புகள் உள்ளது.


