News May 3, 2024
நாமக்கல் மாவட்டத்தில் மழை

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 26, 2025
நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிள், பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கக்கூடாது. இதை மீறி யாராவது லஞ்சம் கேட்டால், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகாரளிக்கலாம். மேலும், 04286-281331, 9445048878, 9498190735, 9445048933 ஆகிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 26, 2025
டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
நாமக்கல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’