News January 6, 2026

நெல்லையில் பொங்கல் டோக்கன் விநியோகம் பணி தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

Similar News

News January 25, 2026

நெல்லை: விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி

image

நெல்லை மாவட்டம் பத்தமடை கோபாலன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மகாராஜன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன் நண்பர் மாரியுடன் நேற்று இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சென்ற போது பத்தமடை அருகே பிரான்சேரி பகுதியில் லாரியை முந்தி சென்ற போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மகாராஜன் தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து மேல செவல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 25, 2026

நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!